ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா!

ஞாயிறு பெப்ரவரி 12, 2017

தடையை மீறி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது.கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா மீண்டும் சோதனை செய்ததாக சியோல் பாதுகாப்பு அமைச்சகம்  தகவல் தெரிவித்துள்ளது. 

பல நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு வடகொரியா சோதனை செய்யும் முதல்  ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது. 

வடக்கு பியோங்கன் பிராந்தியத்தில் இருந்து இந்த ஏவுகணையை காலை 7:55 மணிக்கு பங்க்யான் ஏவுதளத்தில் இருந்து  ஜப்பானின் கடல் எல்லையில் விழும்படி வடகொரியா சோதனை செய்துள்ளது.