ஐஎஸ், அல்-காய்தா அச்சுறுத்தல் தொடர்கிறது: ஐ.நா. அறிக்கை

August 13, 2017

இராக்கில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து சிரியாவிலும் அந்த அமைப்புக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் தீவிரமாக போரிட்டு வருகின்றன. எனினும் ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அவ்வப்போது தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக ஐ.நா. சபையின் 24 பக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராணுவரீதியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்டுள்ளனர். எனினும் அந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் ஊடுருவியுள்ளனர்.

இதேபோல மேற்கு, கிழக்கு ஆப்பிரிக்கா, அரேபிய தீபகற்ப பகுதிகளில் அல்-காய்தா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இரு அமைப்புகளின் ராணுவ கட்டமைப்புகள் அழிக்கப்பட்டாலும் அவற்றால் உலக அமைதிக்கு இன்னமும் அச்சுறுத்தல் தொடர்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்
சனி ஒக்டோபர் 21, 2017

குர்திஸ்தான் தலைநகர் எர்பில் நோக்கி ஈரானிய துணைப்படைகளின் உதவியுடன், கவச ஊர்திகள் சகிதம் வெள்ளிக்கிழமை ஈராக்கிய படைகள் முன்னெடுத்த வலிந்த படையெடுப்பு முறியடிக்கப்பட்டிருப்பதாக குர்திஸ்தான் மாநில பா

வெள்ளி ஒக்டோபர் 20, 2017

வடகொரியாவுக்குப் போர் மிரட்டல் விடுப்பது அமெரிக்காவுக்குத் தான் பேராபத்து என்று ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.வடகொரியா அமெரிக்காவை குறிவைத்து அவ்வப்போது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைச் சோதனையைநடத்த

வெள்ளி ஒக்டோபர் 20, 2017

நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜெசிந்தா அர்டென் பதவியேற்க உள்ளார். மிகக்குறைந்த வயது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெறும் ஜெசிந்தாவுக்கு வயது 37.

வெள்ளி ஒக்டோபர் 20, 2017

தமது வரலாற்று வாழ்விடங்களான கேர்க்குக், கணாக்கின் ஆகிய நகரங்களை ஆக்கிரமித்திருக்கும் ஈரானிய - ஈராக்கிய ஆயுதப் படைகளுக்கு எதிராக நிராயுதபாணிகளான குர்தி மக்கள் தமது உயிரைத் துச்சமென மதித்துக் கிளர்ச்

வியாழன் ஒக்டோபர் 19, 2017

குர்திஸ்தானின் கேர்குக் நகரையும், அதனை அண்டிய பகுதிகள் சிலவற்றையும் ஆக்கிரமித்திருக்கும் ஈராக்கிய - ஈரானிய படைகளால் நிராயுதபாணிகளான குர்தி வீரர்களும், பொதுமக்களும் அடித்தும், வெட்டியும் படுகொலை செய

வியாழன் ஒக்டோபர் 19, 2017

எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம்