ஐ.எஸ். தீவிரவாதிகள் இடையே எய்ட்ஸ் வேகமாக பரவி வருகிறது

புதன் ஓகஸ்ட் 26, 2015

ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் இயங்கி வருகிறது.  அதன் தீவிரவாதிகள், உலகின் பல நாடுகளில் வேரூன்றி உள்ளனர்.  இந்தநிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இடையே எய்ட்ஸ் வேகமாக பரவி வருகிறது என்ற பீதி எழுந்து உள்ளது. 

 

இதனையடுத்து அனைத்து தீவிரவாதிகளும், எய்ட்ஸ் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என்று ஐ.எஸ். தலைமை உத்தரவிட்டு உள்ளது.  இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை தற்கொலைப்படை தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

 

இதுவரையில் 16க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.  பெண்கள் மற்றும் சிறுமிகள் துன்புறத்தப்பட்டு, அவர்களிடம் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலர் பாலியல் வல்லுறவில் ஈடுபடுவதால், நோயின் பாதிப்பு அதிகரிக்கலாம் என்ற அச்சமும் தீவிரவாதிகள் மத்தியில் எழுந்துஉள்ளது.