ஐக்­கிய தேசியக் கட்சி மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை 19 ஆம் திகதி!

திங்கள் ஏப்ரல் 16, 2018

ஐக்­கிய தேசியக் கட்சி மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக நிய­மிக்­கப்­பட்ட அர­சியல் சபை கடந்த வாரம் அல­ரி­மா­ளி­கையில் முதன்­மு­த­லாக கூடி­ய­துடன், அதில் கட்­சியின் பிர­தான பத­விகள்  19 ஆம் திகதி நிரப்­பப்­ப­டு­மெனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது .

இதன்­படி அன்­றைய தினம் இடம்­பெற்ற பதவி நிய­ம­னம்­பற்­றிய  முடிவு ஐ.தே.கட்­சியின் மே தினக் கூட்­டத்தில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­படும் என அர­சியல் சபை வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்­புக்­காக அதி­காரம் மிக்க அர­சியல் சபை­யொன்று கடந்த 7ஆம் திகதி இர­க­சிய வாக்­கெ­டுப்பின் மூலம் நிய­மிக்­கப்­பட்­டது.  ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தாச மற்றும் உப தலைவர் ரவி கரு­ணா­நா­யக்க ஆகியோர் இச்­ச­பைக்கு பதவி வழி­யாக நிய­மனம் பெற்­றுள்­ளனர். அத்­துடன் நவீன் திசா­நா­யக்க, அகில விராஜ் காரி­ய­வசம், மங்­கள சம­ர­வீர, ரஞ்சித் மத்­தும பண்­டார, ஹரின் பெர்­னாண்டோ, ருவன் விஜே­வர்­தன, அஜித் பீ பெரேரா, இரான் விக்கிரமரட்ன, ஜே. சி. அலவத்துவல, நளீன் பண்டார, அசோக பிரியந்த ஆகியோரும் அரசியல் சபையில் அங்கம் வகிக்கின்றனர்.