ஐநாவின் விதிமுறைகளை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது!

யூலை 17, 2017

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை எப்படி வரையவேண்டுமென ஐநாவின் விதிமுறைகளை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது என சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்|கு வருகை தந்திருந்த ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் சிறிலங்காவின் பயங்கரவாதச் சட்டத்தை மோசமாக விமர்சித்திருந்தார். அத்துடன், பயங்கரவாத எதிர்ப்பின் போது, மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்கள் ஊக்குவிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் சிறிலங்கா அரசாங்கம் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபடவேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இதற்குக் கருத்துத் தெரிவித்த விஜயதாச ராஜபக்ஷ, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரைவதற்கு ஐநாவின் வழிகாட்டு முறைகள் எதையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

எமது நாட்டு அமைச்சரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமே கொண்டுவரப்படும். சட்டங்கள் எமக்கானவை. அவை இந்த நாட்டிலேயே உருவாக்கப்படவேண்டும். நாங்கள் உருவாக்கும் சட்டமே இங்கு அமுல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

செய்திகள்
புதன் யூலை 26, 2017

 தமிழ் நாட்டில் இருந்து நாடு திரும்பும் ஈழ அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன் யூலை 26, 2017

இலங்கை போக்குவரத்துச் சபை மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான பேருந்து, அம்பாறை –கல்முனை வீதியிலுள்ள மல்வத்தை எனுமிடத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக

புதன் யூலை 26, 2017

கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுச்செல்லும் ரயிலை இடைமறித்து கொலன்னாவை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதையடுத்து அப்பக

புதன் யூலை 26, 2017

வவுனியா - தாலிக்குளம் பகுதியில் சுமார் 30 குடும்பங்களுக்கு இதுவரையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.