ஐநா கிளப் போல மாறிவிட்டது!

செவ்வாய் டிசம்பர் 27, 2016

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், ஐக்கிய நாடுகள் (ஐநா) சபை அமைப்பை கவலை அளிக்கும் ஒரு அமைப்பு என்று விமர்சனம் செய்துள்ளார்.

ஐநா அமைப்புக்கு மிக அதிக அளவில் ஆற்றல் உள்ளதாவும், ஆனால் அந்த அமைப்பு மக்கள் ஒன்று கூடி சந்தித்து பேசி மகிழ ஏற்படுத்தப்பட்ட ஒரு கிளப் போல மாறிவிட்டது என்று டிவிட்டர் வலைதளத்தில் டொனால்டு டிரம்ப் ஐநா அமைப்பு குறித்து தெரிவித்துள்ளார்.

மேற்கு கரைப் பகுதியில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐநா பாதுகாப்பு குழு வாக்கெடுப்பை தாமதப்படுத்துவதை உறுதிசெய்ய தனிப்பட்ட முறையில் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரத்தில் தலையிட்டார்.

ஆனால், இறுதியில் இது குறித்த தீர்மானம் கடந்த வெள்ளிக்கிழமையன்று நிறைவேறியவுடன், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், இது போன்ற அம்சங்களில் நிலைமை மாறுபட்டு இருக்கும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.