ஐ.நா தூதுக்குழு மலையகத்துக்கு!

December 06, 2017

எதேச்சதிகாரமான தடுப்புக்காவலுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கும் ஐ.நா தூதுக்குழு,  சிறிலங்கா விஜயம் செய்துள்ளது. திங்கட்கிழமை (04) வருகைதந்த மூவரடங்கிய இந்தத் தூதுக்குழு, எதிர்வரும் 15ஆம் திகதி வரையிலும் சிறிலங்கா தங்கியிருக்கும்.

இந்தக் குழுவில், ஜோஸ் அன்டோனியோ குவாவர பெர்முடஸ், லே டூமீஸ் மற்றும் எலினா ஸ்டீனேர்ட் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள், மேல் மாகாணம், வடமத்திய, வடக்கு, கிழக்கு,​ தெற்கு மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

இதேவேளை, மலையகத்துக்கும் இவர்கள் விஜயம் செய்யவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரச அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய தரப்பினரையும், இவர்கள் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இந்தக் குழு, சிறிலங்கா  விஜயம் தொடர்பிலான தன்னுடைய இறுதி அறிக்கையை, ஐ.நா மனித உரிமை பேரவையில், 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கையளிக்கவுள்ளது.

செய்திகள்
வெள்ளி February 23, 2018

9 வருடங்களின் பின்னர் இன்று (23) நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் குழுத் தேர்தலில் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

வெள்ளி February 23, 2018

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த சாந்தரூபன் என்ற அகதி அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு சிறிலங்காவை வந்தடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது.