ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்று சுவிஸ் நாட்டை ஊடறுத்து செல்கின்றது

சனி மார்ச் 12, 2016

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய  ஈருருளிப்பயணம் இன்றைய நாளில் சுவிஸ் நாட்டை ஊடறுத்து செல்கின்றது . பிரான்ஸ் மற்றும் சுவிஸ்  நாட்டு மனிதநேய செயற்பாட்டாளர்கள்  இருவர் பல்லின மக்களிடமும் ஐரோப்பிய நாடுகளிடம் தமிழின அழிப்புக்கு நீதி கோரி பயணத்தை தொடர்ந்த வண்ணம் முன்னெடுக்கின்றனர்.

 எதிர்வரும் திங்கள்கிழமை ஜெனிவா நகரில் நடைபெற இருக்கும் பேரணியில் நீதிக்கான ஈருருளிப்பயணம் இணைந்துகொண்டு இறுதியாக ஐநா மனிதவுரிமை ஆணையாளர் அலுவலகத்தோடு சந்திப்பை மேற்கொண்டு மனு ஒன்றை கையளிக்க உள்ளனர் .