ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டை சென்றடைந்தது

சனி மார்ச் 12, 2016

தமிழின அழிப்புக்கு நீதி  கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் மாலை 7 மணிக்கு சுவிஸ் நாட்டை சென்றடைந்தது. பிரான்ஸ் மனிதநேய செயற்பாட்டாளர்கள் இப் பயணத்தை மேற்கொண்டு சுவிஸ் நாட்டு மனிதநேய செயற்பாட்டாளர்களிடம் ஒப்படைத்தனர்.

இவ் நிகழ்வில் சுவிஸ் உணர்வாளர்கள் கலந்துகொண்டு பிரான்ஸ் மனிதநேய செயற்பாட்டாளர்களை வரவேற்றுக்கொண்டனர்.  இன்றைய தினம் ஈருருளிப்பயணம் தொடர்ந்து ஐநா நோக்கி பயணிக்கின்றது. இப் பயணம் எதிர்வரும் திங்கள்கிழமை ஜெனிவா நகரில் நடைபெற இருக்கும் மாபெரும் பேரணியில் இணைந்துகொள்கின்றது.