ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் தொடர்கின்றது

புதன் மார்ச் 02, 2016

தமிழின அழிப்புக்கு நீதி கோரி  ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இரண்டாவது நாளாக mont saint guibert எனும் இடத்தில் இருந்து ஆரம்பித்து 83 KM  தூரத்தை கடந்து Ciney  எனும் நகரத்தில் இடைநிறுத்திக் கொண்டுள்ளது .இன்றைய காலைநிலை குளிரும், மழையாகவும் இருப்பினும் பயணத்தை மேற்கொண்ட மனிதநேய செயற்பாட்டாளர்கள் மாவீரர்களின் நினைவோடு உறுதியோடு தமது போராட்டத்தை முன்னெடுத்தார்கள் .

நாளைய தினம் நீதிக்கான ஈருருளிப் பயணம் லக்சம்பர்க் நாட்டை அண்மிக்க இருக்கிறது .வியாழக்கிழமை மதியம் யேர்மன் நாட்டு  மனிதநேய செயற்பாட்டாளர்கள் ஈருருளிப் பயணத்தை பொறுப்பேற்று தொடர்ந்து  முன்னெடுப்பார்கள் .

எதிர்வரும் 14.3.2016 அன்று ஜெனிவா மாநகரில் நடைபெற இருக்கும் மாபெரும் பேரணியில் மனிதநேய ஈருருளிப் பயணம் சென்றடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .