ஐநா நோக்கி பயணிக்கும் கண்காட்சி!

Tuesday September 11, 2018

09.09.2018 அன்று நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஐநா நோக்கிய தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் கண்காட்சி ஊர்திப்பயணமும் ஆரம்பமாகி  உள்ளது. 

இப்பயணம் சுவீடன் , டென்மார்க் , யேர்மனி, இத்தாலி நாடுகளின் தலைநகரங்களை ஊடறுத்து இறுதியாக ஜெனீவா மாநகரத்தை சென்றடைய உள்ளது.

அவ்வகையில் எதிர்வரும் 12.09.2018 அன்று மாலை 15:30 மணிக்கு பேர்லின் மாநகரத்திலும், மறுநாள் 13.09.2018 அன்று மாலை 15:30 மணிக்கு Düsseldorf மாநகரத்தில் தமிழ் வான் கண்காட்சி நடைபெறும்.  

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - யேர்மனி