ஐ.நா பேரணிக்கு காசி ஆனந்தன், அங்கையற்கண்ணி அழைப்பு

சனி மார்ச் 12, 2016

தமிழர்களின் தாயகம், தமிழீழ தாயகம் என்பதை ஐ.நா மன்றில் உரக்க கூறுவோம். நம்முடைய குரல் என்றென்றைக்கும் விடுதலை குறித்த குரலாகவே அமையும் என வழக்கறிஞருர் அங்கையற்கண்ணியும் கவிஞர் காசி ஆனந்தனும் தெரிவித்துள்ளனர்.

ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பித்து ஐ.நா சபை முன்றல் வரை…14.03.2016 திங்கட்கிழமை, மதியம் 14:00 முதல் 17:30 மணிவரை நடைபெறவுள்ள கவனயீர்ப்பில் கலந்து கொள்ளுமாறு விடுத்துள்ள அழைப்பிலேயே மேற்படி குறிப்பிட்டனர்.

புலம்பெயர்கள் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றைக் குரலாக மனித உரிமைகள் ஆணையகத்தில் தமிழீழ விடுதலையின் நியாயத்தை உறுதி செய்வதற்காக முருகதாசன் திடலில் ஒன்றிணைய இருக்கிறார்கள்.

அந்த வகையில், உலகில் எந்த வரலாற்றிலும் வேறு எந்த நாளிலும் நடந்திராத அளவிற்கு நம்முடைய தேவையை ஈகத்தை பதிப்பதாக இந்த ஈருருளிப் பயணம் இருக்கின்றது.

இந்த ஈருருளிப் பயணத்திற்கும் அதன் முடிவாக நடைபெற இருக்கும் பேரணிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமல்ல, தாய்த்தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு தமிழர்களும் மனமுவந்து வரவேற்கின்றோம். அவர்களோடு நாமும் உடலாக இணைந்து பணியாற்ற இயலாவிட்டாலும் மனதளவில் இணைந்து போராட இருக்கின்றோம் என வழக்கறிஞருர் அங்கையற்கண்ணி தெரிவித்துள்ளார்.

கவிஞர் காசி ஆனந்தன் தனது அழைப்பில்,முள்ளிவாய்க்கால் குற்றங்கள் உலகம் தழுவிய அளவில் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்ற நமது குரலை தொடர்ந்தும் நாம் அழுத்தமாக வலியுறுத்த இருக்கிறோம்.

என்றைக்கும் நம்முடைய குரல் தமிழீழ விடுதலை குறித்த குரலாகவே அமையும். மார்ச் மாதம் 14ம் திகதி மிகப் பெரிய பேரணியை ஐரோப்பா எங்கும் வாழ்கின்ற தமிழர்கள் நடாத்த இருக்கின்றார்கள்.

ஐரோப்பாவில் பரவி வாழும் தமிழர்கள் அனைவரும் இந்தப் பேரணியில் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.  இது வெறும் பேரணி அல்ல, இது ஒரு போரணி. அறவழியில் இது ஒரு பேரணி. தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தில் இதுவும் ஒன்று என்பதால் இதுவொரு போரணி என்றார்.