ஐ.பி.சியில் இருந்து விலகினார் இரவி அருணாச்சலம்! அடுத்தது என்ன?

May 18, 2017

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் களங்கம் கற்பித்த ஐ.பி.சி நிறுவனத்தால் உயர்ந்த ஊதியத்தில் வழங்கப்பட்ட பத்திரிகை ஆசிரியர் பதவியைத் துச்சமென மதித்து, அப்பதவியைத் தூக்கியெறிந்து ஐ.பி.சி நிறுவனத்தில் இருந்து இரவி அருணாச்சலம் அவர்கள் விலகியுள்ளார்.

இதற்கான அதிகாரபூர்வ அறிவித்தலை நேற்று 17.05.2017 புதன்கிழமை இரவு தனது முகநூல் ஊடாக இரவி அருணாச்சலம் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

இரவி அருணாச்சலம் அவர்களின் இந்த முடிவு தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் அமோக வரவேற்பிற்கு உள்ளாகியிருக்கின்றது.

அதுவும் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்ந்தேறிய துயர்தோய்ந்த நாட்களில் மாவீரர்களின் தியாக வரலாற்றிற்கும், மடிந்த மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இரவி அருணாச்சலம் அவர்கள் எடுத்துள்ள முடிவு அவர் மீதான மதிப்பை உயர்த்தியுள்ளது.

இது இவ்விதம் இருக்க இரவி அருணாச்சலம் அவர்களின் முடிவு ஐ.பி.சி நிறுவனத்திற்குள் எதிர்வரும் நாட்களில் மேலும் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கக்கூடும் என்றும், அடுத்தது என்ன நடக்கும் என்று குழப்பத்தில் ஐ.பி.சி பணியாளர்கள் சிலர் இருப்பதாகவும் ஐ.பி.சியின் உள்ளக வட்டாரங்கள் சங்கதி-24 இணையத்திற்கு அறியத் தந்துள்ளன.

 

 

செய்திகள்
வெள்ளி செப்டம்பர் 22, 2017

ஈழமுரசு, சங்கதி-24, tamilpolity ஆகிய ஊடகங்களின் தாய் அமையமாகத் திகழும் ஊடக மையத்தின் அடுத்த பாய்ச்சலாக விரைவில் பிரான்சைத் தளமாகக் கொண்டு தமிழ்த் தேசியத் தொலைக்காட்சி உதயமாக உள்ளது.

செவ்வாய் செப்டம்பர் 19, 2017

பிரான்சில் கேணல் பரிதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி! 

திங்கள் செப்டம்பர் 18, 2017

வவுனியா ஜோசப் முகாமில் இளைஞர், யுவதிகளின் அவலக் குரல்களுக்கு மத்தியில் நடந்து சென்றேன்...

செவ்வாய் செப்டம்பர் 12, 2017

தமிழினப்படுகொலைக்கு நீதிவேண்டி 6ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட