ஐ.பி.சியை தடை செய்ய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு – கசிந்தது உள்ளக வரைபு!

May 17, 2017

தமிழீழ தேச சுதந்திர இயக்கமாகிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் களங்கம் விளைவிக்கும் ஐ.பி.சி நிறுவனத்தைத் தமது பொது நிகழ்வுகளில் அனுமதிக்காது தடை செய்வதற்குத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஐரோப்பிய கிளை ஒன்று முடிவு செய்திருக்கின்றது.

கடந்த 11.05.2017 வியாழக்கிழமை வெளியாகிய ஐ.பி.சி பத்திரிகையில் அதன் பணிப்பாளரான நிராஜ் டேவிட் என்பவர் எழுதிய கட்டுரையில், போதைப் பொருள் கடத்தல், கடனட்டை மோசடி, கடவுச்சீட்டு மோசடி ஆகியவற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் ஈடுபடுவதாக உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அத்தோடு நியூயோர்க் இரட்டைக் கோபுரங்கள் மீது அல்கைடா பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்புபட்டிருந்தமை போன்ற தொனியிலும் அக்கட்டுரையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து கடந்த வார இறுதி நாட்களில் ஐரோப்பிய நாடொன்றில் அவசரமாகக் கூடிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கிளை நிர்வாகிகள், ஐ.பி.சி நிறுவனத்தைத் தமது பொது நிகழ்வுகள் அனைத்தில் இருந்தும் தடை செய்வதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 15.05.2017 திங்கட்கிழமை அன்று குறிப்பிட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கிளை நிர்வாகிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் வரைபு சங்கதி-24 இணையத்திற்குக் கசிந்துள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கிளையொன்று எடுத்துள்ள இந்த முடிவைத் தழுவி ஐ.பி.சியைத் தமது பொது நிகழ்வுகளில் ஏனைய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக் கிளைகளும் தடைசெய்யும் என்றும், இது ஐரோப்பிய நாடுகளில் ஐ.பி.சியின் முகத்திரையைக் கிழிப்பதற்கு வழிகோலும் என்றும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

செய்திகள்
வெள்ளி நவம்பர் 17, 2017

தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள்  வழமைபோன்று இவ் ஆண்டும் மாவீரர் நாளன்று  வெளிவருகின்றன.

வெள்ளி நவம்பர் 17, 2017

மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, மாவீரர்  வாரத் தொடக்க நாளான  கார்த்திகை 20.11.17 முதல் 27. 11.17 வரை இந்து ஆலயங்களிலும்.  தேவாலயங்களிலும்.

வியாழன் நவம்பர் 16, 2017

குறித்த நினைவுத் தூபி மாவீரர்களின் தியாகங்களையும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறுகளையும் வேண்டுமென்றே கொச்சைப்படுத்தியுள்ளது...

வியாழன் நவம்பர் 16, 2017

நெருக்கடியான காலகட்டங்களில் உண்மைகளை வெளிக்கொண்டுவர துணிச்சலோடு செயற்பட்ட ஓர் சிறந்த ஊடகப் போராளி...