ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தூதுவராக கிறேஸ் ஆசீர்வாதம்?

Thursday September 13, 2018

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் புதிய தூதுவராக கிறேஸ் ஆசீர்வாதம் பதவி ஏற்க்கவுள்ளார். டெலானோ என்ற இணையத்தளத்தில் வெளியான இந்த தகவலை வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவராக பதவியுள்ள ரோட்னி பெரேரா அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக செல்லவிருப்பதனால் இவர், அவரது வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அடுத்த மாதம் முதல் கிறேஸ் ஆசீர்வாதம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவராக தனது கடமைகளை பொறுப்பேற்க்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.