ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலை வந்தடைந்த 7 ஆம் நாள் நீதிக்கான ஈருருளிப் பயணம்!

March 07, 2018

Phalsbourg நகரசபை முன்றலில் இருந்து ஆரம்பித்த  நீதிக்கான ஈருருளிப் பயணம் அம்மாநகர முதல்வரிடம் மனு கையளிக்கப் பட்டது, தொடர்ச்சியாக 43 KM தொலைவு கடந்து Saverne மாநில முதல்வர் மற்றும் நாடாளுமன்ற உதவியாளரிடம் எமது தார்மீக அடிப்படை உரிமை சார்ந்தும் பேசப்பட்டது.

 வரலாறுகளின் வழித்தடங்களில் நியாயமான கோரிக்கைகள் என்றும் மறுக்கப் பட்டது கிடையாது அவ்வழியே எமது போட்டத்தின் நியாயமான கோரிக்கைகளும்.  நடந்து கொண்டு இருக்கும் இனவழிப்பு , கலச்சார சீர்கேடு, நில அபகரிப்பு... எனும் திட்டமிட்ட சத்தமில்லா இனவழிப்பும் தெளிவாக பேசப்பட்டு எழுத்து வடிவாகவும் கையழிக்கப் பட்டது. 

 Strasbourg மாநகர சபை முதல்வரினையும் சந்தித்து அவரிடமும் எமது மனு கையழிக்கப் பட்டு தொடர்ச்சியாக Strasbourg வாழ் தமிழ் மக்களின் வரவேற்போடு ஐரோப்பிய ஆலோசனை சபை  முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் எமது இனவழிப்புச் சான்றின் படங்கள் , எமது கோரிக்கைகள் தாங்கிய  பதாகைகள் கொண்டு ஆர்ப்பாட்டம் அமைதிவழியில் நிகழ்த்தப் பட்டது.   

அவ்வேளையில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அடுத்து மிக முக்கிய அங்கம் வகிக்கும்  ஐரோப்பிய ஆலோசனை சபையில் வெளி நாட்டு வெளிவிவகார அமைப்புக்கு பொறுப்பாக இருக்கின்ற இரு அதிகாரிகளை  சந்தித்து மேலும் விரிவாக சமகால அரசியல்ச் சூழ்நிலை குறித்தும் இனவழிப்பிற்கான சுயாதீன விசாரணையின் முக்கியம் குறித்தும் அவ்விசாரணை துரிதப் படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப் பட்டது.

  அத்தோடு நாளை மீண்டும் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் இருந்து ஐ. நா முன்றல் நோக்கி எமது இலட்சியப் பாதையில் நீதி வேண்டி மனிதநேய ஈருருளிப் பயணம் தொடரும்.

 

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் August 07, 2018

தமிழினத்திற்கு முகமும், முகவரியும் தந்த தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த அன்னை பார்வதியின் பிறந்த நாளை தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமி

வெள்ளி யூலை 27, 2018

 TELO  நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்விற்கும் எமதமைப்புக்கும் (TCC) எந்த வித தொடர்பும் இல்லை