ஐரோப்பிய நாடாளுமன்றம் முன்பாக அணி திரளுக!

Sunday September 09, 2018

கடந்த 1ம் திகதி பிரித்தானியா வில் ஆரம்பித் ஈருருளிப் பயணம் நெதர்லாந்தை வந்தடைந்து பின்னர் தொடர்ந்து பெல்ஜியம், ஜேர்மனி, பிரான்சு ஸ்ராஸ்புர்க்கை 11.09.2018 மதியம் வந்தடைவதுடன், கடந்த 3ம் திகதி பாரிசிலிருந்து புறப்பட்ட ஈருருளி பயணப்போராட்ட வீரர்களும் ஒன்றாக சந்தித்து 11ம் நாள் பி.பகல். 3.00மணி முதல் 6.00மணிவரை ஐரோப்பியநாடாளுமன்றம் முன்பாக நடைபெறவுள்ள ஓன்று கூடலிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.

 அழிக்கப்பட்ட இன்னும் அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் தமிழ் இனத்திற்காக நீதி வேண்டி இனத்தின் வலிகளை தங்கள் கால்களில் தாங்கி போராடும் ஈருருளி பயணப்போராளிகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுக்கும் வகையில் 11ம் நாள் அனைத்து தமிழ் மக்களையும் ஐரோப்பிய நாடாளுமன்றம் முன்பாக அலையென திரளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு