ஒக்ஸ்போர்ட் மாட்டுப் பண்ணையின் நிர்வாகத்தை பிள்ளையான் கும்பலிடம் ஒப்படைத்தது சிங்களம்!

Tuesday November 06, 2018

பிரித்தானியாவில் தமிழ்த் தேசிய செயற்பாடுகளை முடக்கும் நோக்கத்துடன் ஒக்ஸ்போர்ட் பிரதேசத்தின் காட்டுப்புறத்தில் சிங்களத்தால் இயக்கப்பட்டு வரும் மாட்டுப் பண்ணையின் நிர்வாகம் பிள்ளையான் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் நிழற்படங்கள் வெளிவந்துள்ளன.

 

இறுதி யுத்தத்தில் சிங்களப் படைகளிடம் சரணடைந்து சிங்களத்தின் கைக்கூலிகளாக மாறி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சிலரை முன்னிலைப்படுத்தி 2016ஆம் ஆண்டிலிருந்து இம் மாட்டுப் பண்ணை இயங்கி வருவதோடு, அங்கு போட்டி மாவீரர் நாள் உட்பட பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

Sangeethan
சிங்களக் கைக்கூலி சங்கீதன்

 

ஏலவே இப் பண்ணையில் இடம்பெறும் நிகழ்வுகளில் பிள்ளையானின் நெருங்கிய நண்பரான மருத்துவர் வாமன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்த பொழுது அவரது முகவராக டென்மார்க்கில் செயற்பட்ட தம்பா என்றழைக்கப்படும் பிரிதிவிராஜ் போன்றோருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை, கருணா – பிள்ளையான் கும்பல்களின் மேற்பார்வையின் கீழ் இம் மாட்டுப் பண்ணையை சிங்களம் இயக்குகின்றதா? என்ற சந்தேகத்தைத் தமிழ்த் தேசிய உணர்வாளர்களிடையே ஏற்படுத்தியிருந்தது.

Thamba
தம்பா

 

தவிர இறுதி யுத்தத்தில் சிங்களப் படைகளிடம் சரணடைந்து, பிள்ளையானின் தலையீடு காரணமாக விடுதலை செய்யப்பட்ட ஜிகாத்தன் என்பவர் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டி மாவீரர் நாளில் ஒக்ஸ்போர்ட் மாட்டுப் பண்ணையில் மத்திய சுடரேற்றியிருந்தார்.

 

இந் நிலையில் இப் பண்ணையின் பிரமுகர்களின் ஒருவரான இளையதம்பி குமார் நிசாந்தன் என்பவர் மட்டக்களப்பு சென்று பிள்ளையானின் பேச்சாளரான பிரசாந்த் என்பவரிடம் விருது பெற்ற நிழற்படம் சங்கதி-24 இணையத்திற்குக் கிடைக்கப் பெற்றுள்ளது.

Nishanthan
பிள்ளையானின் பேச்சாளரிடம் விருது பெறும் நிசாந்தன்

 

ஒக்ஸ்போர்ட் மாட்டுப் பண்ணையில் நடைபெற்ற போட்டி மாவீரர் நாள் நிகழ்வுகளில் அணிவகுப்புக்களை மேற்கொண்டவாறு, சிறீலங்காவின் சுதந்திர தினத்திற்கு முகநூல் மூலம் இவர் வாழ்த்துத் தெரிவித்து வந்துள்ளார்.

Oxford1

Oxford

 

Nishanthan

அத்துடன் சிங்களப் படையினரால் தான் தமிழர்களுக்கு விடுதலை கிட்டியுள்ளது என்றும், தனது தாய்நாடு சிறீலங்கா ஒரு பரடைஸ் (சொர்க்கபூமி) என்றும் தனது முகநூலில் இவர் பதிவிட்டுள்ளார்.

Nishanthan

Nishanthan

இவை மட்டுமன்றி தனது நண்பர்களான சிங்களப் படையினருடன் தென்னிலங்கையில் இவர் உல்லாசமாக விடுமுறை கொண்டாடிய நிழற்படங்களும் சங்கதி-24 இணையத்திற்குக் கிடைத்துள்ளன.

Nishanthan