ஒரு கிலோ 'மாவா' போதைப்பொருள் மீட்பு !

August 20, 2018

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இயங்கிவரும் கேக் விற்பனை நிலையம் இன்று (20) திங்கட்கிழமை யாழ்.காவல் துறையால்  மூன்றாவது தடவையாக முற்றுகையிடப்பட்டது.

அங்கு முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் 30 சிறிய பொதிகளாக பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டது. அதனை விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களுக்கு மாவா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் காவல் துறை பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.

அவை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சிறப்பு காவல் துறை   பிரிவினரால் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியிலுள்ள கேக் விற்பனை நிலையம் இன்று திங்கட்கிழமை முற்றுகையிடப்பட்டது.

இதன்போது முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது, விற்பனைக்குத் தயாராகவிருந்த சுமார் ஒரு கிலோ கிராம் மாவா போதைப்பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டன. 

செய்திகள்