ஒரு மீனின் கதை - சூழலியல் நாடகம் - அவசியம் வருக!

திங்கள் செப்டம்பர் 14, 2015

ஒரு சமூகத்தின் பண்பாட்டு கலாச்சார அடையாளமாக திகழ்வது கலையும் இலக்கியமும் ஆகும்.


இந்த கலைகளில் ஒன்றான ’மைம்’ நாடக கலை என்பது வசனங்கள் இல்லாமல் மௌனத்தின் துணை கொண்டு தனது உடல் மொழியால் மக்களுக்கு தங்கள் கருத்துகளை வெளியிடும் ஓர் முறையாகும்.

 

‘ஒரு மீனின் கதை’ எனும் சூழலியல் நாடகம், மேற்கு வங்கத்தை சேர்ந்த நாடக கலைஞர் சுசாந்த தாஸ் அவர்களால் எழுதி இயக்கப்பட்டது. இந்நாடகத்தில் சுசாந்த தாஸ் தனி ஒருவராக நடித்திருக்கிறார், இந்த நாடகத்தை இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளில் அரங்கேற்றி பெரும் வரவேற்பு பெற்றது.


அந்த நாடகம் நிமிர் மற்றும் மே 17 இயக்கத்தின் முயற்சியால் முதன் முறையாக சென்னையில் நடக்க விருக்கிறது. ஆகவே அனைவரும் அவசியம் வாரீர்!

 

 

நாள் 14-செப்-2015 திங்கட்கிழமை மாலை 5 30 மணி
இடம்: செ தெ நாயகம் பள்ளி, தி நகர், ( நடேசன் பூங்கா அருகில் ) சென்னை 

மே17 இயக்கம்