ஒரே நேரத்தில் மூன்று படங்களை முடித்த திரிஷா

April 20, 2017

திரிஷா ஒரே நேரத்தில் மூன்று படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.சினிமாவில் 10 வருடங்களை தாண்டியும் இன்னும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துவந்த திரிஷா, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 

அந்த வரிசையில் ‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை-2’ ஆகிய படங்களில் நடித்து வந்தார். இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பையும் தற்போது திரிஷா முடித்துவிட்டார். இதற்காக இப்படங்களின் இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக திரிஷா நடிப்பில் வெளிவந்த சில படங்கள் தோல்வியை சந்தித்தன. எனவே, வெற்றிக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் திரிஷாவும் இருக்கிறார். இவர் நடித்திருக்கிற இந்த மூன்று படங்களும் திரிஷாவின் சினிமா பயணத்திற்கு பெரிய தூண்டுகோலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. 

செய்திகள்
ஞாயிறு April 08, 2018

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஸ் வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் நேற்று யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.

வியாழன் April 05, 2018

அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.