ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு, ரணில் மீண்டும் உறுதி.

May 02, 2017

ஒற்றையாட்சியைப் பாதுகாக்கும் வகையிலேயே அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். புதிய அரசமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை அடுத்து வரும் இரண்டு மூன்று மாதங்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். தற்போதைய சூழலில் பல தரப்பட்ட பேச்சுகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இன்னும் மதத் தலைவர்களுடனும் பொது மக்களிடம் கலந்துரையாட வேண்டியுள்ளது. அனைத்துத் தரப்பினருடைய பொது இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே அரசமைப்பு கொண்டு வரப்படும். நாட்டை இரண்டாகப் பிளவுப்படுத்தாது ஒற்றையாட்சியைப் பாதுகாக்கும் வகையில் அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும்.

ஒற்றையாட்சியின் அடிப்படையில் அதிகாரப்பரவலாக்கல் இடம்பெற்று நாட்டை எவ்வாறு முன்நோக்கிக் கொண்டு செல்வது என்று மாகாண முதலமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளனர். புதிய அரசமைப்பினூடாக ஜனநாயகம்இ மனித உரிமைகளை பாதுகாப்பதுடன்இ பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

செய்திகள்
வெள்ளி June 23, 2017

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கிய உறுதிமொழிக்கு அமைய, காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான அலுவலகத்தை அமைக்கும் பொறிமுறை இடம்பெறுகிறது.

வெள்ளி June 23, 2017

இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கலந்துரையாடலின் போது மோதல் ஏற்பட்டுள்ளது.

வைத்தியர் ஒருவரை மற்றுமொரு வைத்தியர் தாக்கியபோதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

வெள்ளி June 23, 2017

அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் பப்புவா நியூகினியவின் மானஸ் மற்றும் நவுறுதீவு முகாம்களில் உள்ள இலங்கையர்களை அமெரிக்காவில் குடியமர்த்தும் திட்டம் இறுதி நிலையை அடைந்துள்ளது.

வெள்ளி June 23, 2017

கண்ணி வெடிகளின் தாக்கங்களற்ற முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பை உருவாக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்துள்ளார்.