ஒஸாமா பின்லேடன் இன்னமும் உயிருடனே இருக்கிறார் - எட்வேர்ட் ஸ்நோடன்

ஒஸாமா பின்லேடன் இன்னமும் உயிருடனே இருக்கிறார். அவரை அமெரிக்க அரசாங்கம் தற்போதும் பாதுகாத்து வருகிறது. இதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன்" எனத் தெரிவித்திருக்கிறார் எட்வேர்ட் ஸ்நோடன்.
ரஷ்யாவின் 'மொஸ்கோ ட்ரிபியூன்' நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவின் பாதுகாப்பு இரகசியங்களை கடந்த காலத்தில் ஸ்நோடன் வெளியிட்டிருந்தார். அவரைக் கைது செய்து கடுமையாக தண்டிக்க அமெரிக்கா முயன்றது. இதனால் ஸ்நோடன் 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார். தற்போது அங்கு வசிக்கும் ஸநோடன் அந்த நேர்காணலில் மேலும் தெரிவித்தவை வருமாறு:
அல்ஹைடா அமைப்பின் தலைவரான ஒஸாமா பின்லேடன் கொல்லப்படவில்லை. அவர் தற்போதுவரை அமெரிக்காவின் சி.ஐ.ஏயின் பணியாளராகவே உள்ளார். 2013 ஆம் ஆண்டு பஹாமாஸில் தனது குடும்பத்தினருடன் ஒரு வீட்டில் வசித்தார். இதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவருக்கு அமெரிக்கா உதவுகின்றது என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. விரைவில் இந்த ஆதாரங்களுடன் புத்தகம் ஒன்றை வெளியிடவுள்ளேன்.