ஒஸ்கார் 2018 - கேரி ஓல்ட்மேன், பிரான்சஸ் மிக்டார்மண்ட் தேர்வு!

திங்கள் மார்ச் 05, 2018

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வரும் 90-வது ஒஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்த ஆண்டின் சிறந்த நடிகர், நடிகைகளாக பிரான்சஸ் மிக்டார்மண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஒஸ்கர் விருது வழங்கு விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்கினார். இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். 

டார்க்ஸ்ட் ஹார் படத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் கேரி ஓல்ட்மேன் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி படத்தில் நடித்த பிரான்சஸ் மிக்டார்மண்ட் சிறந்த நடிகைக்கானஒஸ்கர் விருதை பெற்றார்

சிறந்த படமாக ஷேப் ஆப் வாட்டர் படமும், சிறந்த வெளிநாட்டு படமாக சிலி நாட்டைச் சேர்ந்த எ பென்டாஸ்டிக் வுமன் படமும், சிறந்த அனிமேஷன் படமாக கோகோ படமும் ஒஸ்கர் விருதை வென்றுள்ளது.