ஓட்டப்பந்தயத்தில் புகுந்த கரடி!

June 17, 2017

அமெரிக்காவின் கொலாரேடொ மாநிலத்தில் நடைபெற்ற ஓட்டப்பந்தய போட்டியில் கரடி குறுக்கே புகுந்து ஓடியதால், போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பரவசத்தில் திக்கு முக்காடி போயினர்.

அமெரிக்காவின் கொலாரேடொ மாநிலத்தில் கொலாரேடொ ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருக்கும் தோட்டம் ஒன்றில் கடந்த வாரம் ஓட்டப்பந்தையம் நடைபெற்றது. பந்தயம் தொடங்கி போட்டியாளர்கள் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் போது அங்கு மறைந்திருந்த கரடி உள்ளே புகுந்தது.

பந்தயத்தினுள் கரடி புகுந்ததால் திகைத்துப்போன போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதனை புகைப்படம் எடுக்கத் தொடங்கினர்.  இதனையடுத்து, அதிகம் பேர் கூடியதால் பயந்து போன கரடி வீதியை கடந்து ஓடி மறைந்தது.

செய்திகள்
சனி June 24, 2017

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று காலை ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட் பொதுமக்கள் மண்ணில் புதைந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

புதன் June 21, 2017

பெல்ஜியத் தலைநகர் பிரசெல்சில் தற்கொலை குண்டுபட்டியணிந்த தாக்குதலாளி ஒருவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.