ஓட்டுக்குழு தலைவர் பிள்ளையானுக்கு தனிச்சிறை

வெள்ளி டிசம்பர் 04, 2015

பிள்ளையானுக்கு சிறைச்சாலையில் தனியறை வழங்கப்பட்டுள்ளது.ஏனைய கைதிகளுடன் இருக்க முடியாது எனவும் தமக்கு தனிச் சிறையறை ஒன்றை வழங்குமாறும் பிள்ளையான் அண்மையில் நீதிமன்றில் கோரியுள்ளார்.

இந்தக் கோரிக்கைய ஏற்றுக்கொண்ட மட்டக்களப்பு நீதவான் எம்.என். அப்துல்லா அதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.  நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் பிள்ளையானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அண்மையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது சட்டத்தரணியின் ஊடாக சிறையில் தனியறையொன்றில் தம்மை அடைக்குமாறு பிள்ளையான் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் 16ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, நீதிமன்றிலிருந்து சிறைக்கு செல்லும் போது தாம் எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என பிள்ளையான் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.