ஓட்டுநர் இல்லாத டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.-கூகுள்

வியாழன் டிசம்பர் 06, 2018

கூகுளின் அல்ஃபபெட் நிறுவனங்களில் ஒன்றான வேமோ நிறுவனம் ஓட்டுநர் இல்லாத கால் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.  

24 மணி நேரமும் ஆப் மூலம் புக் செய்துகொள்ள கூடிய இந்த சேவையை விரைவில் உலகம் முழுவதும் விரிவுபடுத்த உள்ளது கூகுள். 10 வருடங்களுக்கு மேலாக ஆராய்ச்சி செய்யப்பட்டு தற்பொழுது நடைமுறைக்கு வந்துள்ளது இந்த டாக்ஸி சேவை.