ஓ.பன்னீர் செல்வத்தை கத்தியால் குத்த முயற்சி!

August 06, 2017

திருச்சி விமான நிலையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கத்தியால் குத்த ஒருவர் முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியின் பொருளாளராக உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலமாக திருச்சி சென்றடைந்தார்.

விமான நிலையத்தின் வெளிப்புறம் அவரது ஆதரவாளர்கள் பன்னீர் செல்வத்துக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் கையில் கத்தியுடன் ஓ.பன்னீர் செல்வத்தை ஒருவர் நெருங்கியுள்ளார். இதனை கவனத்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் அந்த நபரை மடக்கிப்பிடித்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். தனையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்.

கத்தியுடன் ஓ.பன்னீர் செல்வத்தை நெருங்கிய நபரிடம் விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வால் விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்திகள்