ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணியே அதிமுக!

June 10, 2018

ஒருங்கிணைப்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டனர். அவர்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை நியமித்தனர்.

அ.தி.மு.க. பொதுக்குழு முடிவுகளும், புதிய விதிகளும் தேர்தல் கமி‌ஷன் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதை தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் பரிசீலனை செய்து வந்தனர்.

தற்போது அதற்கு தேர்தல் கமி‌ஷன் ஒப்புதல் அளித்தள்ளது. அ.தி.மு.க.வின் புதிய விதிகளுக்கும், புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கும் தேர்தல் கமி‌ஷன் அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்மூலம் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிதான் அ.தி.மு.க. என்று அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த முடிவை தேர்தல் கமி‌ஷன் தனது அதிகாரப் பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.தேர்தல் கமி‌ஷன் முடிவுக்கு டி.டி.வி. தினகரனின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கும் நிலையில் தேர்தல் கமி‌ஷனின் அங்கீகாரத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

 

செய்திகள்
ஞாயிறு செப்டம்பர் 23, 2018

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வாலா, அதிக மக்கள் ஆலைக்கு எதிராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.