கங்கை நதிக்காக உண்ணாவிரதம் இருந்து போராடிய அகர்வால் காலமானார்!

Thursday October 11, 2018

கங்கை நதியை சுத்தப்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த சமூக ஆர்வலர் ஜிடி அகர்வால் இன்று காலமானார். 

கங்கை நதியை சுத்தம் செய்யும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்; கங்கோதிரி மற்றும் உத்தரகாசி இடையே கங்கை இடையூறு இன்றி பாய்வதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஜிடி அகர்வால் 4 மாத காலமாக உண்ணாவிரதம் இருந்தார். 

87 வயதான அகர்வால் ஜூன் 22 முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். போராட்டம் 100 நாட்களை தாண்டிய நிலையில், நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
கான்பூர் ஐஐடி பேராசிரியராக பணியாற்றிய அகர்வால் நதிகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.