கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் ஜெனிவா பயணம்!

March 12, 2018

ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் கூட்டத் தொடரில் பங்­கேற்­ப­தற்­காக தமிழ் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் ஜெனிவா நோக்கி பய­ணித்து வரு­கின்­றனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் இன்று திங்­கட்­கி­ழமை ஜெனி­வாவை சென்­ற­டை­ய­வுள்ளார். கொழும்­பி­லி­ருந்து நேற்று புறப்­பட்ட அவர் லண்டன் சென்று அங்­கி­ருந்து ஜெனிவா செல்­கின்றார். 

இதே­போன்று வட­மா­காண அமைச்சர் ஆனந்தி சசி­த­ரனும் நேற்று அங்கு பய­ண­மா­கி­யுள்ளார். இவர்­களைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின்  நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மாகாண சபை உறுப்­பி­னர்­களும் ஜெனி­வா­வுக்கு செல்­ல­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இவர்கள் அங்கு நடை­பெறும் உப குழுக் கூட்­டங்­களில் பங்­கேற்­ப­துடன் ஜெனி­வா­வி­லுள்ள இரா­ஜதந்­தி­ரி­க­ளையும் அரச சார்­பற்ற பிர­தி­நி­தி­க­ளையும் சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்­ள­துடன் ஆணைக்­குழு அமர்வில் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் உரையாற்றவும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

செய்திகள்
திங்கள் யூலை 16, 2018

வனவள விலங்கை துன்புறுத்துவது எந்தளவு தூரம் சட்டப்படி தவறான விடயமோ அவ்வாறான விலங்குகளை கூட்டில் அடைந்து அனுமதியின்றி மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் வளர்ப்பதும் தவறான விடயமே என்று தமிழ்த் தேசியக் க

திங்கள் யூலை 16, 2018

வடக்கு கிழக்கில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்படவோ, இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவத் தளபதி மகேஸ்சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

திங்கள் யூலை 16, 2018

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.