கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்கேற்கும் டென்மார்க் மாநாடு

செவ்வாய் மே 10, 2016

இலங்கைத் தீவில் சர்வதேச சட்டங்களும் மற்றும் மனித உரிமை மீறல்கள்  தொடர்பான  மாநாடு எதிர்வரும் 11.05.2016 புதன்கிழமை அன்று டென்மார்க் நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கின்றது.முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு உட்பட ஈழத்தமிழர்களின் நலன்களுடன் தொடர்புடைய பல்வேறு கருத்துப் பகிர்வுகளும், ஆய்வுரைகளும் இம் மாநாட்டில் நிகழ்த்தப்பட இருக்கின்றன.

இதில்  டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய  Michael Aastrup Jensen, Nikolaj Villumsen, Mogens Jensen, Christian Juel     மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்  Francis Harrison,    தாயயகத்திலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (மு நாள்.பா.உறுப்பினர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) கத்தோலிக்க பாதிரியார் எழில் ராஜேந்திரம் (தமிழ் சிவில் சமூகம்) மற்றும் டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின்  தலைவர் பொன். மகேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

இம் மாநாட்டில் பார்வையாளர்களாகப் பங்கேற்க விரும்புவோர் தமது விபரங்களை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு  (sm@dstfdenmark.dk)  அனுப்பி வைத்து முன்பதிவுகளை செய்யலாம்.

இம் மாநாட்டைத் தொடர்ந்து மறுநாள் 12.05.2016 முதல் 17.05.2016 வரை டென்மார்க் தலைநகர் கொப்பன்ஹேகனில் தொடர் கண்காட்சிகளும், துண்டுப் பிரசுரப் பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இப் பரப்புரை நடவடிக்கைகளின் நிறைவாக 18.05.2016 அன்று கொப்பன்ஹேகனில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் பேரணி நடைபெற இருக்கின்றது.தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி முன்னெடுக்கப்படும்.