கஞ்சா மறைத்து வைத்திருந்தவர் கைது!

Monday November 20, 2017

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் 36 கிலோகிராம் கஞ்சாவை, மறைத்து வைத்திருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தெரிவிக்கப்படுவதாவது,

கொடிகாமம் பகுதியில் கஞ்சா மறைத்து வைத்திருப்பதாக சாவகச்சேரிப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதனடிப்படையில் விரைந்து செயற்பட்ட சாவகச்சேரி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், குறித்த இருவரிடமிருந்தும் 36கிலோ கஞ்சாப் பொதிகளினைக் கைப்பற்றியதோடு குறித்த சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.

இந்நிலையில், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் இன்று சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.