கடத்தப்பட்டது காவல் துறையினரின்வாகனம்!

Tuesday September 11, 2018

கொடிகாமம் காவல் துறைக்குச் சொந்தமான வாகனம் ஒன்றை இனந்தெரியாத குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த வாகனத்துக்குள் காவல் துறையினரின் ஆயுதங்கள் இருந்தன என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மணல் கடத்தலைப் பிடிக்கச் சென்றிருந்த வேளை, காவல் துறையினர் தாக்கிவிட்டு வாகனம் கடத்திச் செல்லப்பட்டதாக காவல் துறையினர் கூறுகின்றனர். சம்பவத்தையடுத்து பெருமளவு காவல் துறையினர் தென்மராட்சிப் பிரதேசத்துக்கு வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வாகனத்தை தேடும் பணியில் இராணுவத்தை ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.