கடத்தல்கள் குறித்து கலந்துரையாடல்

வியாழன் ஓகஸ்ட் 04, 2016

மனித, ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பது தொடர்பாக, புதிய செயற்திட்டம் ஒன்றை உருவாக்குவது குறித்து இந்தோனேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

 இந்தோனேசியா சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்த நாட்டின் சட்ட மற்றும் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரை சந்தித்த போது, இது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 
 
 இது தொடர்பான முதற்கட்ட செயற்த்திட்டத்தை தயாரிக்க வேண்டியதின் முக்கியத்துவம் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.  இலங்கையின் சட்ட மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சு, இந்தோனேசியாவின் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சுடன் இணைந்து செயற்படுவதற்கான இணக்கப்பாடும் இதன்போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.
 
 பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது இந்தோனேசிய விஜயத்தை நிறைவு செய்து நேற்று இரவு நாடு திரும்பி இருந்தார்.  இந்த விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோகா விட்டோடோ உள்ளிட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.