கடற்படை வாகனம் மோதி ஒருவர் பலி!

Thursday December 07, 2017

வாத்துவ நகரில் கடற்படையின் வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இதன்படி, சம்பவத்தில் பலியானவர் கல்பாத பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஒருவராகும். வெலிசர கடற்படை முகாமுக்குச் சொந்தமாக குறித்த வாகனம் களுத்துறையில் இருந்து பானதுறை நோக்கி சென்று கொண்டிருந்த போதே, மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

மேலும், கடற்படை வாகனத்தை செலுத்திய சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர்  கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.