கட்டடத்திற்கு இரகசியமாக அனுமதி வழங்கிய கோத்தபாய!

May 19, 2017

கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் நேற்றைய தினம் (18 ) பெய்த அடைமழை காரணம் பாரியளவில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது. அதற்கு முன்னர் வெள்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு பின்னால் ஈ.ஏ.பி நிறுவனத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடம் உடைந்து விழுந்தது. 

இந்த அனர்த்தம் காரணமாக 25 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இடிப்பாடுகளில் சிக்குண்டவர்களை மீட்கும் பயணியில் முப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
 
 வெள்ளவத்தை ஏரியை இணைந்து இந்த கட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அது தரமற்ற வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எரியில் இருந்து ஒதுக்க வேண்டிய நியம தூரம் ஒதுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் இந்த கட்டடத்திற்கு அப்போதைய நகர அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பாளராக செயற்பட்ட கோத்தபாய ராஜபக்சவினால் இரகசியமான முறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
 இதேவேளை, கோத்தபாய ராஜபக்சவினால் பழுது பார்க்கப்பட்ட ரேஸ் கோஸ் கட்டட தொகுதிகளின் கூரைகள் காற்றில் பறந்துள்ளது. அதுவும் தரமற்ற நிலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. 

 கடந்த ஆட்சியின் போது பெருமளவு தரகு பணத்தை பெற்றுக்கொண்ட முறையற்ற வர்த்தகங்களுக்கு கோத்தபாய அனுமதி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகள்
வெள்ளி June 22, 2018

தழிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை, கொடி உள்ளிட்ட உபகரணங்களுடன்,முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் முல்லைத்தீவு-ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் தப்பிச் சென்றுள்ள