கட்டாய விடுப்பை வலியுறுத்தமாட்டேன்!

June 19, 2017

முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையின்படி ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத இரண்டு அமைச்சர்களினதும் கட்டாய விடுப்பை வலியுறுத்தமாட்டேன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இன்று காலை இக்கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். இக்கடிதத்தில், நல்லூர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமி மற்றும் யாழ். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆகியோர் இன்று காலை என்னைச் சந்தித்தனர்.

மாகாண அமைச்சர்களான ப.டெனீஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோர் மீது புதிய விசாரணைகளை நடத்துவதற்காக, விசாரணைகளில் அவர்கள் தலையிட மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தவே அவர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் இக்காலப்பகுதியில் அவர்களுக்கான வரப்பிரசாதங்களை தடையின்றி அனுபவிக்கமுடியும் என்பதால், இது அவர்களுக்கான தண்டனை இல்லை. அதேநேரம் அவர்கள் இந்த விசாரணைகளில் தலையிட மாட்டார்கள் என்ற உறுதிமொழியை தம்மால் வழங்க முடியாது என்று, இரா.சம்பந்தன் முந்திய கடிதத்தில் தமக்கு தெரியப்படுத்தியமையை புரிந்துக்கொள்ள முடிகிறது.

அதேவேளை குறித்த அமைச்சர்கள் விசாரணைகளில் குறுக்கிடக்கூடாது என்று அவர்களுக்கு அறிவுரை வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தனுடன் முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் மதத் தலைவர்களும் இணங்கியுள்ளனர்.

இவர்களின் இணக்கப்பாட்டைக் கருத்தில்கொண்டு கட்டாய விடுப்பு என்ற விடயத்தை வலியுறுத்தப்போவதில்லையெனக் குறிப்பிட்டுள்ளார்.

இணைப்பு: 
செய்திகள்
சனி June 24, 2017

 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து நிரந்த அரசியல் தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும் - கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் 

சனி June 24, 2017

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 8ம் மருத்துவ கண் சம்மந்தப்பட்ட நோய் மருத்துவ விடுதியாகும் இது ஆண், பெண் நோயாளர் கலந்து சிகிச்சை பெறும் விடுதியாகும்.

சனி June 24, 2017

 மண்முனை தென்எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திக்கு உட்பட்ட செட்டிபாளையம் வடக்கு கிராம சேவகர் பிரிவில் வெள்ள அனர்த்த தடுப்பு வடிகான் அமைப்பதற்கு ஆசிய வங்கியின் நிதி ஒதுகீட்டில் 16.5 மில்ல