கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு

January 11, 2017

தமிழகத்தில் கடும் எதிர்ப்பை தொடர்ந்து பொங்கல் பண்டிகை தினம் கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கான கட்டாய விடுமுறை பட்டியல், விருப்பத்திற்ேகற்ப விடுமுறை பட்டியலை வெளியிடப்பட்டு வருகிறது.

 அதன்படி கடந்தாண்டு பொங்கல், குடியரசு தினம், கிருஷ்ண ஜெயந்தி உட்பட 17 நாட்கள் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்தது. அதே போன்று விருப்ப விடுமுறை பட்டியலில் மகா சிவராத்திரி உட்பட 32 நாட்கள் பட்டியலில் இருந்தது. 

இந்த நிலையில், இந்தாண்டுக்கான கட்டாய மற்றும் விருப்ப விடுமுறை பட்டியல் குறித்து  கடந்த நவம்பர் 23ம் தேதி மத்திய அரசு ஊழியர் நல ஒருங்கிணைப்பு குழு கூடி  ஆலோசனை நடத்தியது. அப்போது, 2017க்கான கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நீக்கப்பட்டது. அதற்கு பதில்  விருப்ப விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டது தெரிய வந்தது. 

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு ஊழியர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து  மத்திய அரசு தனது முடிவை மாற்றியுள்ளது. அதாவது பொங்கல் விடுமுறை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பொங்கல் தினமான 14ம் திகதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.  மேலும், கடந்த நவம்பர் 23ம் தேதி பொங்கல் தினம் விருப்ப விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டது.

 தற்போது அதை மாற்றி கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் தினம் சேர்க்கப்படுகிறது. அதற்கு பதிலாக தசரா தினத்திற்கு இரண்டு நாள் விடுமுறை தினத்தை அதாவது செப்டம்பர் 28ம் தேதி ஒரு நாள் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது. 

செய்திகள்
வியாழன் August 17, 2017

உ.பி.யில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவை,  காவல்துறை தடுத்து நிறுத்தி

வியாழன் August 17, 2017

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு  அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

வியாழன் August 17, 2017

உத்திரப் பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொடுக்கப்படாமல் 63 குழந்தைகள் மரணித்த நிகழ்வு ஒரு பச்சைப் படுகொலை.