கண்ணீருடன் விடைகொடுத்தார் ஒபாமா!

January 11, 2017

அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராகப் பதவியேற்ற பராக் ஒபாமா இன்று அமெரிக்க மக்களுக்கு இறுதி பிரியாவிடை உரை நிகழ்த்தினார்.

வழமைக்கு மாறாக அமெரிக்க ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக சிக்காகோவில் அவர் தனது பிரியாவிடை உரையை நிகழ்த்தினார்.

அவரது நம்பிக்கை மற்றும் முற்போக்கான செய்தியை முன்வைத்து கடந்த 2008ஆம் ஆண்டு பராக் ஒபாமா தேர்தலில் வெற்றியீட்டியிருந்தார்.

2008இலிருந்து அமெரிக்க அதிபராகப் பதவி வகித்துவரும் பராக் ஒபாமா இம்மாதம் 20ஆம் நாளுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைவதால் ஓய்வுபெறுகின்றார்.

இன்நிலையில் அவர் இன்று சிக்காக்கோவில் ஆற்றிய உரையில், கடந்த வாரத்தில் எனக்கும், மிச்செலுக்கும் அதிகளவில் வாழ்த்துக்கள் வந்தன, அதற்காக மக்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கு இந்த நேரத்தில் நான் நன்றி கூற விரும்புகிறேன் என்றார்.

ஒவ்வொரு நாளும் நான் மக்களிடமிருந்து ஏதேனும் ஒன்றை கற்றுக்கொண்டு இருக்கிறேன், அதுவே என்னை அமெரிக்காவின் சிறந்தஅதிபராக மாற்றியது என்று கூறிய ஒபாமாவின் கண்களில் வந்த கண்ணீர் அமெரிக்க மக்களை நெகிழச் செய்தது.

தற்போது, உலகின் பலமான நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது, மேலும், வரலாற்றிலேயே அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை அமெரிக்கா உருவாக்கியுள்ளது, நமது பொருளாதார வளர்ச்சியும், சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளது. எனினும் நாம் வளர இன்னும் நிறைய உயரம் இருக்கின்றது என்று இந்த உரையின் போது ஒபாமா தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் மூலமே நாம் வளர்ச்சியடைய வேண்டும், அதுவே சாத்தியம் என்று கூறிய ஒபாமா, மக்களின் ஒற்றுமையால் மாத்திரமே மாற்றங்களும், வளர்ச்சிகளும் நிகழும் என்றார்.

பயங்கரவாதம் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது, இதனை நமது குழந்தைகளுக்கு எடுத்துரைத்து அவர்களை சிறந்த பண்புள்ளவர்களாக வளர்க்க வேண்டும், மேலும் அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், அமெரிக்க வளர்ச்சியில், குடியேறியவர்களின் பங்கு முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

செய்திகள்
சனி April 21, 2018

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணை சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வந்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் நிலவி வந்தது.