கனடாவில் தமிழ் அரசியல் தறிகெட்டுப்போய் நீண்ட நாட்களாகிவிட்டது

December 20, 2016

கடும் குளிரிலும் தேர்தல் களைகட்டுகிறதாம்..... எதற்கு???

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா? என்பார்கள். ஆனால் தமிழர் சமூகத்தில் பூதக்கண்ணாடி கொடுத்தாலும் தெரியாது என்பதே இன்றைய அவலநிலை. இன்று எனக்கு அருகில் உள்ள மர்ர்க்கம் தோன்கில் தொகுதியின் மாநில தேர்தலுக்கான பழமைவாதக்கட்சியின் வேட்பாளரைத் தெரிவு செய்யும் தேர்தலாம்... பரபரப்புக்கு பஞ்சமில்லை... இதை நீங்கள் வாசிக்கும் போது யார் வெற்றி பெற்றார் என்பது தெரிந்திருக்கும்..

கனடாவில் தமிழ் அரசியல் தறிகெட்டுப்போய் நீண்ட நாட்களாகிவிட்டது. இத்தேர்தல் மட்டும் என்ன அதை மாற்றி அமைத்துவிடுமா? முதலில் அடிப்படையை சற்று கற்றுக் கொள்வோம்... கனடிய தேசிய அரசியலாக இருந்தாலும் மாநில அரசியலாக இருந்தாலும் தம்மை ஒரு இனமான ஒருங்கமைத்து பயணிப்பவர்களே வெற்றிக்கனிகளை பெறுகின்றனர்.

கடந்த தேசியத்தேர்தலில் தம்மை கட்சிக்குள் முக்கியமாக நிலைநிறுத்தி தம் சமூகத்தை தம் பின்னால் அணிதிரட்டிப் பயணித்த இருவர் அதில் பாரிய வெற்றியும் பெற்றனர். ஒருவர் சீக்கிய சமுகத்தை சேர்ந்த நவடீப் பெயின்ஸ். இவரின் வழிகாட்டலில் 16 சீக்கியர்கள் பாராளுமன்றம் சென்றது மட்டுமல்ல அவர் உட்பட 4 பேர் அமைச்சர்களுமாகியுள்ளனர். பிரம்டனை முழுமையாக தன்னகபடுத்தியுள்ளனர்.

மற்றவர் ஓமார் அழகபாரா. மிசுசாகா தொகுதி ஒன்றில் இருந்து தெரிவான இவர் 8 முஸ்லீம் பாராளுமன்ற உறுபினர்கள் தெரிவாவதற்கு பின்புலமாக இருந்தவர். இங்கும் முஸ்லீம் என்று பார்க்கப்பட்டார்களே அன்றி ஒரு நாடு எனப்பார்க்கப்படவில்லை. தனிமரம் தோப்பாகாது என்பதை சரிவரப்புரிந்து அவர்கள் செயற்பட்டதால் அது அவர்களுக்கு சாத்தியமாயிற்று. ஆனால் நாம் என்ன செய்தோம்... கிடைத்தவாய்ப்பை எங்களுக்குள் மோதி ஈற்றில் ஒருவர் தான் தேர்தலில் நிற்கும் நிலையை உருவாக்கினோம். தடி எடுத்தவன் எல்லாம் இந்த சமுகத்தில் இன்று தண்டாளன்...

யாரிடம் இருக்கிறது சமூக அக்கறை? எரிகிற வீட்டில் புடுங்கின அளவு லாபமாம் என்ற நிலையிலேயே என் இனம் எம்மவராலேயே பந்தாடப்படுகிறது. ரூச் ரிவரில் சமீபத்தில் நடந்த மாநிலத் தேர்தலின் போது பழமைவாதக்கட்சி தமிழர் ஒருவரை வேட்பாளராக தெரிவு செய்யாதது குறித்த கடுமையான கருத்துக்களை முன்னர் பதிவு செய்திருந்தேன்.. அப்போது அது குறித்து தாம் சார்ந்த தலைமைக்கு அழுத்தம் கொடுத்து மாற்றத்தை செய்யாதவர்கள் அன்று அது தவறு என்று வெளிப்படையாக கருத்துச் சொல்ல மறுத்தவர்கள் இன்று அந்தக் கட்சிக்குள் நடைபெறும் குத்துவெட்டுக்கள் குறித்து முறைப்பாடு செய்யும்போது அவர்களைப் பார்த்து என்ன சொல்வது என்று எனக்கு புரியவில்லை.

முதல் கேணல் முற்றும் கேணல் என்பார்கள்.. இனம் சார்ந்த அக்கறை இருக்குமானால் இனம் சார்ந்த தவறுகள் இழைக்கப்படுகின்ற போது அது குறித்து கட்சிகளைக் கடந்து செயற்பட முடியாதவர்கள் பின்னர் தம் நலனிற்காக இனம் தம் பின்னால் அணிதிரளவேண்டும் என்று எதிர்பார்ப்பது மடமைத்தனம். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம் என்று பட்டறிவினூடாக சொன்னவர்கள் நாம். ஆனால் நாம் இன்று என்ன செய்கிறோம். தமிழர்களிடையேயே மோதி மகிழ்கின்றோம். நிச்சத்திரவிழாவிற்கும் தெருவிழாவிற்கும் வரும் மக்களை எங்கள் ஆதரவு மக்கள் என்று சொல்லி எம்மை நாமே ஏமாற்றுகின்றோம். இல்லை அதுதான் உண்மையானால் காங்கிரஸ் ஆதரித்த வே;ட்பாளர் தமிழர் வாக்குகளில் ரேமண்ட சோவிற்கு பின்னால் முன்றாவது இடத்தை பெற்றது எவ்வாறு என யாரும் விளக்கம் தரமுடியுமா?

எலி வளையானாலும் தனி வளைவேண்டும் என்போம். நடைபெறும் தேர்தலிகளில் தமிழர் சமூகம் என்ற பார்வை இருந்தால் இதில் முழுமையாக ஒத்துழைக்க என் இனம் என்றும் பின்நிற்காது என்பதே உண்மை. ஆனால் அது குறித்த பார்வையும் செயற்பாடும் இதுவரை அமையவில்லை என்பதுவும் உண்மை. தம் தனிநபர் நலன்களை முன்னித்தியே அரசியல்வானில் இன்றும் பல தமிழர்கள் பயணிக்கின்றனர். அவர்கள் தம் நலனை நிலைநிறுத்துவதற்கு கமிழ் மக்கள் தொடர்ந்தும் பலிகடாவாக்கப்படுகின்றனர் என்பதே அவலநிலை. இப்போக்குகளில் முழுமையான மாற்றம் வெளிப்படாதவரை கானல் நீராக தமிழ் அரசியல் பயணமும் சூறாவளியில் அகப்ப்ட்ட படகு போல் திக்கு திசையற்று அலைக்கழியப் போகிறது.

செய்திகள்
திங்கள் March 13, 2017

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்குப் பின்னரான கடந்த எட்டாண்டு காலப்பகுதியில் என்றுமில்லாத அளவிற்குக் கடந்த சில வாரங்களாகத் தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் மக்களால் தன்னெழுச்சியு