கனடாவில் புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் இருவர் விபத்தில் பலி

December 29, 2016

கனடாவில் பிக்கறிங்கில் Taunton வீதி மற்றும் Altona வீதியும் சந்திக்கும் பகுதியில் நேற்று(28) இடம்பெற்ற கோர விபத்தில் ஈழத் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்ட நிலையில் குறித்த இளைஞர்கள் பயணித்த Honda மற்றும் Toyota ஆகிய வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நேருக்கு நேர் மோதுண்ட வாகனத்தில் இருந்த இரண்டு ஈழத் தமழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்றும், குறித்த விபத்தில் சதீஸ் லோகநாதன் என்ற 35 வயதுடைய நபர் மற்றும் அதீஷ் பாலசுப்பிரமணியம் என்ற 21 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ் லோகநாதன், Whitbyயில் உள்ள Charley Ronicks pub இல் கடமை முகாமையாளராக கடமை புரிந்துள்ளார். அதீஷ் பாலசுப்பிரமணியம், ஒன்ராறியோ நிறுவனம் பல்கலைக்கழகத்தில் வணிக பட்டம் முடித்துள்ளார் .

இந்த கோர விபத்து தொடர்பில் தகவல் தெரிந்தால் 1-888-579-1520 மற்றும் 1-800-222-8477 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

 .

செய்திகள்
புதன் January 18, 2017

இந்திய அரசே! தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சல்லிக்கட்டின் தடையை நீக்கு, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!