கனடா குடும்பம் ஒன்றிற்கு யாழில் காவல் துறை வழக்கு!

August 12, 2017

 யாழ்ப்பாணம் வரணி கரம்பைக் குறிச்சி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 51 இலட்சத்தி இருபது ஆயிரம் ரூபா பெறுமதியான 89 பவுன் நகையும் 6000 கனேடிய டொலர் என்பவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் என முறைப்பாடு கடந்த 7ம் திகதி கொடிகாமம் காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக விரைவாக விசாரணைகளை மேற்கொண்ட கொடிகாமம்  காவல் துறை கனடாவில் இருந்து வந்த இவர்கள் வெளிநாட்டில் காப்புறுதி பெற்றுக்கொள்வதற்காக பொய்யான வழக்குபதிவு செய்து நாடகம் ஆடியதை கண்டுபிடித்தனர்.

கனடாவில் இருந்து வந்து பொய்யான முறையில் முறைப்பாடு தொடர்பாக நான்கு நாட்களாக மேற்கொண்ட விசாரணையில் பொய்யான வழக்குபதிவு  செய்துள்ளதை கண்டுபிடித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கனடாவில் இருந்து வந்த வரணி பகுதியில் வசிக்கும் குடும்பத்திற்கு எதிராக வழக்குபதிவு செய்து எதிர்வரும் 16 ம் திகதி கொடிகாமம்  காவல் துறையினர் சாவகச்சேரி நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளனர்.

செய்திகள்