கனடா நாட்டு பிரதமரை சந்தித்த மலாலா!

Sunday September 09, 2018

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த மாணவி மலாலா யூசூப்சாய் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவை நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து ட்விட்டரில் தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின், ``மலாலாவை ஒட்டாவா நகரில் சந்தித்தது மகிழ்ச்சியைத் தருகிறது. ஜி7 நாடுகளின் பாலின சம உரிமை ஆலோசனை குழுமத்தின் வேலைப்பாடுகள் குறித்து, இக்குழுமத்தின் குறிக்கோள்களான பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பள்ளிக்கல்வி குறித்தும் கலந்து ஆலோசித்தோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள மலாலா, கனடா வந்தது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், தன்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கியதுக்கும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பள்ளிக்கல்வி குறித்த முனைப்பிற்கும் பிரதமர் ட்ருடோவுக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார். இந்த  ஜி7 நாடுகளின் பாலின சம உரிமை ஆலோசனை குழுமத்தில் கனடா, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. 

இளம் வயதில் நோபல் பரிசு வென்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய்க்கு, கனடாஏற்கனவே  கெளரவக் குடியுரிமை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.