கமலஹாசன் வீட்டில் தீ - பெறுமதிமிக்க புத்தகங்கள் தீக்கிரை

April 08, 2017

 ஆழ்வார்பேட்டையிலுள்ள நடிகர் கமலஹாசனின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தினால், அவரது பெறுமதிமிக்க புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன. கமலஹாசனின் வீட்டில் நேற்று நள்ளிரவு இந்த விபத்து நேர்ந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மூன்றாவது மாடியிலுள்ள அறையிலிருந்த குளிர்சாதனபெட்டி அதிக வெப்பமடைந்தமையினால் இந்த தீ விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் குளிர்சாதனபெட்டிக்கு அருகிலிருந்து புத்தகங்களில் தீபற்றியுள்ளதாகவம், வீடு புகை மண்டலமாக காணப்பட்டதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

தனது வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தினால் தனக்கும் தனது வீட்டிலிருந்தவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

செய்திகள்
ஞாயிறு April 08, 2018

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஸ் வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் நேற்று யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.

வியாழன் April 05, 2018

அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.