கமல் - ரஜினி கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்குமா?

செப்டம்பர் 26, 2017

நாத்திகரான கமல்ஹாசனும் ஆன்மிகவாதியான ரஜினிகாந்தும் ஒன்றுசேர்ந்தால் தமிழகத்தில் புதியதோர் நல்லாட்சி ஏற்படலாம் என்ற பரவலான கருத்து உருவாக்கம் பெற்றுள்ளது.

‘நான் எப்போ வருவேன் - எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா.., வர வேண்டிய நேரத்திலே கரெக்ட்டா வருவேன்’ என்ற ரஜினிகாந்தின் சினிமா வசனம் விரைவில் மெய்ப்படும் நேரம் நெருங்கிவிட்டதாக தமிழக மக்களில் ஒருதரப்பினர் கருதத் தொடங்கியுள்ளனர்.

‘அரசியல் என்னும் புதைக்குழிக்குள் கால்வைத்து சிக்கிக் கொள்ள மாட்டேன்’ என்று ஒதுங்கிப்போய் கலைத்துறையில் தனது வல்லமையை பதிவு செய்வதில் மட்டும் அக்கறைகாட்டி வந்த கமல்ஹாசன், வர்தா புயல் பாதிப்பின்போது தமிழக அரசுக்கு எதிராக முதன்முறையாக குரல் எழுப்பினார்.

அந்நாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் மனம் கமலின் விமர்சனத்தால் எந்த அளவுக்கு புண்பட்டிருக்கும்? என்பது கமலின்மீது அப்போது அறிக்கைப் போர் தொடுத்த இந்நாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சுடுமொழிகள் இன்றளவும் கமல் ரசிகர்களின் மனங்களில் நீறுபூத்த நெருப்பாக - மௌனமான எரிமலையாக புகைந்து கொண்டிருக்கிறது.

செய்திகள்
திங்கள் June 25, 2018

உலக வெண்புள்ளி தினமானது ஆண்டுதோறும் ஜூன் 25-ம் திகதி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.