கமல் வீட்டை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சி போராட்டம்!

யூலை 14, 2017

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி கமல் வீட்டை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விஜய் டி.வி.யில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமலுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

அந்த நிகழ்ச்சி தமிழ் கலாசாரத்துக்கு எதிராக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன.

அதில், கமலை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த கமல் தனக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்களுக்கு கண்டனத்தையும் பதிவு செய்தார்.

இதனை தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டு முன்பு எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு காவல் துறையினர்   பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியினர். கமல் வீட்டை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்திகள்
ஞாயிறு ஒக்டோபர் 15, 2017

2 வருடங்களுக்குப் பிறகு விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படமும், சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படமும்