கம்யூனிஸ்ட்டின் கொலையை 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒப்புக்கொண்ட பிரான்ஸ்!

வெள்ளி செப்டம்பர் 14, 2018

மாரைஸ் ஆதீன் எனும் கம்யூனிஸ்ட் ஒருவரை, தங்கள் காலனியாதிக்கத்தின்கீழ் இருந்த அல்ஜீரியாவில் 60 ஆண்டுகளுக்கு முன்பு சித்திரவதை செய்து கொலை செய்ததாக பிரான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இதை பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

1957இல் கைதானபோது 25 வயதாகியிருந்த ஆதீன், அல்ஜைர்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு கணிதவியலாளராக பணியாற்றிக்கொண்டிருந்தார். ஏழு ஆண்டுகள் கடுமையான போருக்குப் பிறகு 1962இல் அல்ஜீரியா பிரான்ஸ் இடமிருந்து விடுதலை பெற்றது