கருணாநிதி அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்!

Sunday November 19, 2017

தி.மு.க தலைவர் கருணாநிதி அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என மு.க அழகிரி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து விலகியே இருந்த முன்னாள் மத்திய மந்திரி மு.க அழகிரி, அவ்வப்போது சென்னை வந்து தனது தந்தை கருணாநிதி மற்றும் தாயாரை சந்தித்து உடல் நலம் விசாரிப்பது மட்டும் உண்டு. கடந்த மாதம் நடைபெற்ற குடும்ப திருமண விழாவில் பங்கேற்ற அழகிரி கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க அழகிரி, தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலத்துடன் உள்ளதாகவும், அவர் அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட விரும்புவதாக கூறினார்.