கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்!

Friday August 10, 2018

கருணாநிதி மறைந்ததை தொடர்ந்து அவர் மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. வக்கீல் குமரேசன் சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க. அரசு மீது அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மீது 2012-ம் ஆண்டு 7 வழக்குகளும், 2013-ம் ஆண்டு 5 வழக்குகளும், 2015-ம் ஆண்டு ஒரு வழக்கும் என மொத்தம் 13 அவதூறு வழக்குகள் அ.தி.மு.க. அரசு சார்பில் சென்னையில் உள்ள முதன்மை செசன்சுநீதிமன்றில்  தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன.

கருணாநிதி மறைந்ததை தொடர்ந்து அந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. வக்கீல் குமரேசன் சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றில்  மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்க அரசு வக்கீலுக்கு நீதிபதி சுபாதேவி உத்தரவு பிறப்பித்தார்.